கேன்சரை உருவாக்கும் மீன்கள்..! பிணங்கள் மீது தடவப்படும் ரசாயனம்..! பீதியை கிளப்பும் மீன் மார்க்கெட்.!

கேன்சரை உருவாக்கும் மீன்கள்..! பிணங்கள் மீது தடவப்படும் ரசாயனம்..! பீதியை கிளப்பும் மீன் மார்க்கெட்.!



Formalin applied fishes are recovered from covai fish market

இறந்துபோனவர்களின் சடலங்கள் கெட்டுப்போகாமல் இருக்க, சடலங்கள் மீது தடவப்படும் பார்மலின் என்னும் வேதிப்பொருள் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க மீன்கள் மீது தடவப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள மீன் மார்க்கெட்டில், மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மீன் மார்க்கெட்டில் சோதனை செய்த அதிகாரிகள், 70 கிலோ பார்மலின் தடவப்பட்ட மீன்களையும், 430 கிலோ கெட்டுப்போன மீன்களையும் பறிமுதல் செய்துள்ளன்னர்.

கடந்த வாரம், மதுரையில் உள்ள மீன் மார்க்கெட்டில் பார்மலின் தடவிய மீன்களை அதிகாரிகள் கைப்பற்றிய நிலையில், தற்போது கோவை மீன் மார்க்கெட்டிலும் இதுபோன்ற மீன்களை பறிமுதல் செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற ரசாயனம் தடவிய மீன்களை உண்பதால், வயிற்றுவலி, சிறுநீரக கோளாறு, தொடர்ச்சியாக உண்டால் புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.