தமிழகம்

வசதி இருப்பவர்கள் உணவு வைக்கலாம், வசதி இல்லாத ஏழைகள் சாப்பிடலாம்! சமூக ஆர்வலர்கள் அசத்தல் ஏற்பாடு!

Summary:

food for poor people

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அப்பகுதியில் யாரும் பசியால் வாடக்கூடாது என்பதற்காக சிறந்தமுறையில் நூதன ஏற்பாடு செய்துள்ளனர். அறந்தாங்கி நகராட்சி தாலுகா அலுவலகம் சாலையில் பொது இடத்தில் கண்ணாடி பெட்டி ஒன்றை வைத்துள்ளனர். அந்த பெட்டியில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளும் உணவு வைக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு வைத்துள்ளனர்.

அந்த கண்ணாடி பெட்டியில் இருக்கும் உணவை பசியுடன் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எடுத்து சாப்பிடலாம். இதற்கு பணம் எதுவும் கொடுக்க தேவையில்லை.  அதேபோல் விருப்பமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் உணவை ஓட்டலில் வாங்கியோ அல்லது வீட்டில் சமையல் செய்து கொண்டு வந்தோ அந்த கண்ணாடி பெட்டியில் உணவு வைக்கலாம். 

மேலும், கண்ணாடி பெட்டியில் உள்ள உணவை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கண்ணாடி பெட்டியில் கெட்டுப்போன உணவு உள்ளதா என கண்காணிப்பார்கள். ஏழைகளின் பசியை போக்கும் சமூக ஆர்வலர்களின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். 


Advertisement