வெள்ளத்தில் பரிதவிக்கும் அசாம் மாநிலம்! இதுவரை 89 பேர் உயிரிழப்பு! மத்திய அரசு வழங்கிய நிவாரண நிதி!flood in asaam

வடமாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், டெல்லி, அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

அதேபோல் அசாமில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பிரம்மபுத்திரா மற்றும் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளமானது நதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி அசாமில் 89 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 

Assam

அசாம் மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. 24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தின் காசிரெங்கா தேசிய பூங்காவில் வசித்து வந்த 120 விலங்குகள் உயிரிழந்துள்ளன. பூங்காவிற்குள் தண்ணீர் புகுந்ததால் பல விலங்குகள், மக்கள் பயன்படுத்தும் சாலைகளை கடந்து உயரமான பகுதிகளுக்குச் செல்கின்றன. முதற்கட்டமாக மத்திய அரசு அசாம் அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக 346 கோடி ரூபாயை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.