இந்தியா

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக போராட்டம்! பேருந்துகளுக்கு தீ வைப்பு!

Summary:

Fire on bus in delhi

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமானதையடுத்து, நாடு முழுவதும் அச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மும்பை, மேற்குவங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement