தமிழகம்

மருத்துவமனையில் தீ விபத்து.! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 36 பச்சிளம் குழந்தைகள்.! பதறியடித்து ஓடிய உதயநிதி ஸ்டாலின்.!.!

Summary:

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள மகப்பேறு வார்டில் மருத்துவர்கள் தங்கும் அறையில் இருந்த ஏ.சி.யில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த அறை முழுவதும் புகைமண்டலமாக மாறியது. இதனையடுத்து அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், 36 குழந்தைகளுடன் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்களும் சக நோயாளிகளும் 2-வது மாடிக்கு சென்று 36 குழந்தைகளையும், அந்த குழந்தைகளின் தாய்மார்களையும் பத்திரமாக மீட்டு வந்தனர். சரியான நேரத்தில் அவர்களின் மீட்பு நடவடிக்கையால் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக 36 பச்சிளம் குழந்தைகள் எந்த தீக்காயமும் இல்லாமல் தப்பித்தனர்.

அங்கு நடந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர், தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு தாய்மார்களுக்கு ஆறுதல் தெரிவித்து, சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Advertisement