சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்! அதிர்ச்சி சம்பவம்!

சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்! அதிர்ச்சி சம்பவம்!


Fire accident

சென்னை ஆவடியில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

சென்னை ஆவடி செக்போஸ்ட் அருகே சி.டி.எச். சாலையில் ராஜப்பா என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. மூன்று மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளும், முதல் 2-வது மற்றும் 3-வது தளங்களில் பர்னிச்சர் மான்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராஜப்பாவின் சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டின் தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

fire

அங்கு தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த போலீசார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சூப்பர் மார்க்கெட்டில் எரிந்த தீயை 1 மணிநேரம் போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு நடந்த தீ விபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அந்த சூப்பர் மார்க்கெட்டின் தரைதளத்தில் உள்ள ஏ.சி. யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.