தமிழகம்

நீ செத்து போயிட்டன்னு சர்டிபிகேட் வாங்கிட்டு வா..! மண்ணெண்ணெய் கேனுடன் சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் செய்த அதிர்ச்சி காரியம்...!

Summary:

Finance company employee scold women in Cudaloor

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு கிளாங்காடு புது தெருவை சேர்ந்த சுதந்திரமணியின் மனைவி சங்கீதா (30). இவர் சேத்தியாத்தோப்பு பகுதியில் இயங்கிவரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் 30 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், கடனுக்கான தொகையை மாதம் மாதம் தவறாமல் செலுத்திவந்த சங்கீதா ஒரு மாதம் மட்டும் பணம் செலுத்த தாமதம் ஆனதாக கூறப்படுகிறது.

இதனால் சங்கீதாவின் வீட்டுக்கு பணம் வசூலிக்க வந்தவர் சங்கீதா, அவரது குழந்தைகள் மற்றும் கணவரை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனால் சங்கீதாவின் கணவர் பணம் வசூலிக்க வந்தவரை தாக்கியுள்ளார். இதன்பிறகும் பணம் வசூலிக்க வந்தவர் சங்கீதாவை மீண்டும் மீண்டும் தரக்குறைவாக பேசி, உனது இறப்பு சான்றிதழ் கொண்டு வந்து தந்தாள் நீ வாங்கிய கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து விடுகிறோம் என்று கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சங்கீத கையில் மண்ணெண்ணெய் கேனுடன் தனது குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு நிதி நிறுவனம் இயக்கும் இடத்திற்கு சென்று தன் மீதும், குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனே சங்கீதா மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றியுள்ளனர். இது தொடர்பாக சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement