வரும் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!! எதற்க்காக இந்த ஆலோசனை கூட்டம் தெரியுமா??

வரும் 19ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!! எதற்க்காக இந்த ஆலோசனை கூட்டம் தெரியுமா??


Fight against corona stalin meets 13 MLAs on may 19th

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் வரும் மே 19ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் வரும் மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதேநேரம் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து வரும் மே 19 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.