மனைவியின் மீது ஏற்பட்ட திடீர் சந்தேகம்.. குழந்தையை பிளேடால் அறுத்து கொலை முயற்சித்த தந்தை.!

வேலூரில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன் தனது குழந்தையை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர் சென்னை தாம்பரம் விமானப்படை அலுவலக உணவகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (21). இவர்களுக்கு பிறந்த 26 நாட்களே ஆன ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் ஊருக்கு வந்த மணிகண்டன் நேற்று குழந்தையை பார்க்க தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று கூறி மனைவியிடம் தகராறு செய்து பிளேடால் குழந்தையின் கழுத்து மற்றும் கையில் அறுத்துவிட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
இதனைடுத்து வலியால் அலறி துடித்த குழந்தையை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அணைக்கட்டு போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.