தமிழகம்

மகளிடம் தந்தை செய்த விபரீதம்!. தாய் எடுத்த கொடூர முடிவு!.

Summary:

மக்களிடம் தந்தை செய்த விபரீதம்!. தாய் எடுத்த கொடூர முடிவு!.


சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்துவருபவர் சுந்தர்ராஜன் இவருடன் இவரின் மனைவி வள்ளி, ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இறுதினங்களுக்கு முன்பு சுந்தர்ராஜன் மயக்கமடைந்துவிட்டார் என கூறி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 

மருத்துவர்கள், சுந்தர்ராஜன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவலறிந்த போலீசார்  சுந்தரராஜனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்தனர். பரிசோதனையில் அவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சுந்தரஜனின் மனைவியிடம்  போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வள்ளி, சுந்தர்ராஜன் தன்னிடமும், தன் மகளிடமும் கஞ்சா போதையில் தினமும் தகராறு செய்து வந்ததால் அவரை கட்டையால் தாக்கி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் வள்ளியை கைது செய்து மேலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement