தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு.! சோக சம்பவம்.!

தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை எடுத்த விபரீத முடிவு.! சோக சம்பவம்.!


father suicide fo son fail in exam

ஈரோடு மாவட்டம் கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி. இவருக்கு சுமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சஞ்சய் அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிவில் மூன்று பாடத்தில் தேல்வி அடைந்துள்ளான் சஞ்சய்.

இதனால் அப்புசாமி சஞ்சயை மீண்டும் டுட்டோரியல் காலேஜில் சேர்த்துள்ளார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான். இதனால் மனமுடைந்த அப்புசாமி கடந்த 1-ம் தேதி விஷம் குடித்துள்ளார். இதனையடுத்து  அக்கம்பக்கத்தினர் அப்புசாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அப்புசாமி நேற்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு  வருகின்றனர். தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.