தமிழகம்

ததந்தையை வெட்ட வந்த மகன்.! சுதாரித்துக்கொண்ட தந்தை.! பின்னர் அவருக்கே நிகழ்ந்த பயங்கரம்.!

Summary:

ததந்தையை வெட்ட வந்த மகன்.! சுதாரித்துக்கொண்ட தந்தை.! பின்னர் அவருக்கே நிகழ்ந்த பயங்கரம்.!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவருக்கும் இவரது மகன் காசிராஜனுக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காசிராஜன் தனது தந்தை தமிழ் அழகன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக தமிழ் அழகன் தனது தம்பி கடல் ராஜா மற்றும் அவரது உறவினர் காசித்துரையுடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளிய சென்றபோது, காசிராஜன் கையில் அரிவாளுடன் அங்கு வந்துள்ளார்.

தனது தந்தை உட்பட மூன்று பேரையும் அவர் வெட்ட முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட தமிழ் அழகன் உள்ளிட்ட மூவரும் காசிராஜனிடம் இருந்து அரிவாளை பிடிங்கி ஆத்திரத்தில் காசிராஜனை கொடூரமாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த காசிராஜன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காசிராஜன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement