தமிழகம்

அடக்கொடுமையே! இதற்காகவா.. 3 மகள்களையும் ஏரியில் தூக்கிப்போட்டு கொன்ற தந்தை! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

Father killed 3 daughters

தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தாட்கோலி கிராமத்தில் வசித்து வருபவர் பயாஸ். இவருக்கு திருமணமாகி  4 பெண்குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் சிறு சிறு வேலைகளை பார்த்து பிழைப்பை  நடத்திவரும் அவர் சூதாட்டம் மற்றும் மதுபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று இரவு பயாஸ் சூதாடுவதற்குப் பணம் தேவை என்று மனைவியை நச்சரித்துள்ளார்.  ஆனால்.கணவனுக்குப் பணம் கொடுக்க அவருடைய மனைவி மறுத்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பயாஸ் தனது மனைவியைப் பழிவாங்கத் திட்டமிட்டு அவரது 10 வயது மகள் அப்பியா, ஒன்பது வயது மகள் மஹீம், 7 வயது மகள் ஷோயா ஆகியோரை ஊரில் உள்ள தண்ணீர் நிரம்பியுள்ள ஏரிக்கு அழைத்துச் சென்று தூக்கிப்போட்டு படுகொலை செய்தார்.

இந்நிலையில் கணவரையும். மகள்களையும் காணாமல் பயாஸ்  மனைவி ஊர்முழுவதும் தேடியுள்ளார். அதனை தொடர்ந்து தனது மூன்று மகள்களையும் கணவர் ஏரியில் தூக்கி போட்டு கொலை செய்ததை அறிந்த அவர் கதறி துடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊர்மக்கள் ஏரியில் விழுந்து மூன்று சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். இந்நிலையில்  தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement