
Father friend abuse his daughter in kanyakumari
கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மீன் பிடி தொழிலாளி ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜீன் என்ற மற்றொரு மீன்பிடி தொழிலாளி இருவரும் இணைந்து மீன் பிடிப்பது வழக்கம். மீன்பிடித்த பிறகு இருவரும் மது அருந்துவதையும் வாழக்கமாக கொண்டுள்ளனனர்.
இந்நிலையில் மது பாட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டு ஆரோக்கிய ஜீன் தனது நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நண்பனின் காது கேட்காத, வாய் பேசாத மனைவியையும், அவர்களது 11 ஆம் வகுப்பு படிக்கும் மகளையும் பார்த்ததும் ஆரோக்கிய ஜீனுக்கு சல்லாபம் ஏற்பட்டுள்ளது.
இதனால், தான் வாங்கி வந்த மதுவை அதிக அளவில் நண்பனுக்கு ஊற்றிக்கொடுத்துவிட்டு அவரது மகளை மிரட்டி பாலியல் கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது எனவும் ஆரோக்கிய ஜீன் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். மறுநாள் காலை விடிந்ததும் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் அந்த பெண் கூற, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் ஆரோக்கிய ஜீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு பயந்து ஆரோக்கிய ஜீன் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement