தமிழகம்

அக்கா திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்க சென்ற தங்கை.. ஆனால் இப்படி நடக்கும்னு யாரும் நினைக்கல.. துக்கத்திலும் அப்பா எடுத்த நெகிழ்ச்சி முடிவு..!

Summary:

அக்காவின் திருமணத்திற்கு பத்திரிகை வைப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று தங்கைக்கு ஏற்பட்ட சோகம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அக்காவின் திருமணத்திற்கு பத்திரிகை வைப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று தங்கைக்கு ஏற்பட்ட சோகம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு திருமணம் முடிந்து மூன்று மகள்கள் உள்ளநிலையில் நாராயணன் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்துவருகிறார். இந்நிலையில் முதல் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்த நாராயணன் திருமணத்திற்கு பத்திரிகை கொடுப்பதற்காக தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான தும்பை கிராமத்திற்கு வந்துள்ளார்.

வந்த இடத்தில் இளைய மகள் சுதா(19) குளிப்பதற்காக தும்பை கிராமத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றின் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்த சுதா நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். சுதாவுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு சுதாவின் குடும்பத்தினர் கதறி அழுத காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மகள் இறந்த சோகத்தை மனதில் வைத்துக்கொண்டு சுதாவின் தந்தை நாராயணன் செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இறந்த தனது மகளின் கண்கள் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்ற நோக்கில் சுதாவின் கண்களை தானமாக கொடுத்துள்ளார். இதனை அடுத்து சுதாவின் கண்கள் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனை ஒன்றுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.


Advertisement