தமிழகம்

குழந்தை பிறந்த 4 நாளிலேயே தற்கொலை செய்துகொண்ட தந்தை! அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த துயரம்! வெளியான கொடுமையான காரணம்!

Summary:

Father commit suicide for wife gave birth to girl baby


திரிபுரா,  அகர்தலாவில் தனது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்த சோகத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டதும், கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அகர்தலா அருகே கௌதம்நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா தாஸ் . இவரது மனைவி சுப்ரியா தாஸ். 23 வயது நிறைந்த இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுப்ரியா கர்ப்பமானதிலிருந்து அவரது கணவர் மற்றும் மாமியார் இருவரும் அவருக்கு ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என பெருமளவில் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் பெண் குழந்தை பிறந்ததால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதனை வைத்து சுப்ரியாவுடன் சண்டை போட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும் தனக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதே என்ற மனவேதனையில் இருந்த கோபிந்தா குழந்தை பிறந்த  நான்கு நாட்களிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவலை அறிந்த சுப்ரியா அதிர்ச்சியில் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் சுப்ரியாவை பெண்குழந்தையை ஏன் பெற்றெடுத்தாய் என அவரது மாமியார் கொடுமைப்படுத்தி மோசமாகத் திட்டி வந்தார் எனவும், பெண் குழந்தை நமது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் என கூறிவந்தார் என்றும் தெரிவித்துள்ளனர்.  அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement