அதிர்ச்சி! ஏசி அறையில் தூங்கிய மூன்று பேர்! இறுதியில் நடந்த சோகம்!Father and son dead in AC room

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வீட்டில் ஏசி போட்டு உறங்கிய மூன்றுபேர் உடல் கருகி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரி பாகத்தில் வசித்து வருபவர் ராஜு. 60 வயதான இவர் அதே பகுதியில் தனது வீட்டில் இரண்டு மகன்கள் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராஜு தனது மனைவி மற்றும் இளைய மகனுடன் நேற்று இரவு தனி அறையில் ஏசி போட்டு உறங்கியுள்ளார். அவரது மூத்த மகன் மற்றும் மருமகளும் தனி அறையில் உறங்கியுள்ளனர்.

tamil news

இந்நிலையில் ராஜு அவரது மனைவி, மகன் தூங்கிய அறையில் இருந்த ஏசியில் திடீரென தீ பிடித்துள்ளது. மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ அறைமுழுவதும் பரவி புகை மூட்டத்துடன் எரியத் தொடங்கியது. இதனால் மயங்கிய நிலையிலேயே மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

காலையில் எழுந்து வீட்டிற்குள் புகை மண்டலமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜுவின் மற்றொரு மகனான கோவர்தன் தந்தை அறையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.