90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!
கணவன் மனைவி இருவரும் போதை.! மனைவி தூங்கியதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளர்ப்பு தந்தை.!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சாரசா. இவர்கள் இருவரும் கோவை மாவட்டத்தில் செங்கல் சூளையில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் பாலக்காட்டை சேர்ந்த உறவினர் மகளான 11 வயது சிறுமியை வளர்த்து வந்தனர்.
தங்களது வளர்ப்பு மகளை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தனியார் பள்ளில் 7-ம் வகுப்பில் சேர்த்தனர். தங்கராஜூக்கும், அவரது மனைவி சாரசாவுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. போதை தலைக்கேறிய நிலையில் மனைவி சாரசா தூங்கியவுடன் தங்கராஜ் வளர்ப்பு மகள் என்று கூட பாராமல் சிறுமிக்கு பல நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தங்கராஜின் தொல்லை தாங்க முடியாததால் சிறுமி அவரது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு இருந்தபடி 10-ம் வகுப்பு படித்து முடித்தார். தற்போது 17 வயதான அவர் பாலக்காடு சென்றார். பின்னர் அவர் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து அங்குள்ள குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகிறார்கள்.