கொரோனவால் முடங்கிய விவசாயிகள்! ஆனாலும் தேசத்தின் நலனுக்காக அவர்களின் தியாகம்!

கொரோனவால் முடங்கிய விவசாயிகள்! ஆனாலும் தேசத்தின் நலனுக்காக அவர்களின் தியாகம்!



farmers-feeling-for-corona

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் சோகத்தில் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பித்தது நிலையில் அனைத்து வேலைகளும் முடக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகபடியான மக்கள் விவசாயத்தையும், தினக்கூலி வேலைகளை நம்பி வாழ்க்கையை நடத்தி வந்தனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். 

corona
இந்தநிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள், வீட்டிலே பொழுதை கழிக்க முடியாமல். பொது இடங்களில் ஒன்று கூடாமலும், யாருக்கும் சிரமம் கொடுக்கவேண்டாம் என்று நினைத்து கோவில் வாசல்களிலும், வயல்வெளிகளிலும் படுத்து உறங்கி நேரத்தை போக்குகின்றனர்.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, இரண்டு தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் வந்துவிட்டது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை நாங்கள் எங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறோம். எங்களுக்கு நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம் எனவே இந்த கொடூர வைரஸ் ஒழியும் வரை எங்கள் பொழுதை இவ்வாறு கழித்து வருகிறோம்.