அரசியல் தமிழகம்

முதல்வரான ஸ்டாலினை வாழ்த்திய கலைஞர் கருணாநிதி! குடும்பத்தார்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! நெகிழ்ச்சி புகைப்படம்!!

Summary:

இன்று முதல்வராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அவரது குடும்பத்தினர் நெகிழ வைக்கும

இன்று முதல்வராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அவரது குடும்பத்தினர் நெகிழ வைக்கும் வகையில் ஓவியம் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையாக 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து திமுக தலைவரான ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் முதல்வராக பதவியேற்றதுமே ஸ்டாலின் தான் கொடுத்த அசத்தலான 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கையெழுத்திட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் மூழ்கடித்தார். இந்தநிலையில் அவரது குடும்பத்தார்கள் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு அழகான ஓவியம் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.

அதில், கலைஞர் கருணாநிதி, பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் ஸ்டாலினை வாழ்த்துவது போன்று தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.அதனை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement