ரூ.30 ஆயிரம் டிவி ரூ.15 ஆயிரம் என Sony & Samsung ஸ்மார்ட் டிவி வாங்கினீங்களா?.. அதிர்ச்சி உண்மை அம்பலம்.!

ரூ.30 ஆயிரம் டிவி ரூ.15 ஆயிரம் என Sony & Samsung ஸ்மார்ட் டிவி வாங்கினீங்களா?.. அதிர்ச்சி உண்மை அம்பலம்.!


fake-sony-samsung-smart-tv-sales-awareness

 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனியார் யூடியூப் சேனலில் Smart Tv தொடர்பான விளக்க வீடியோ காட்சிகள் வெளியாகின. நம்மூரில் வடமாநிலத்தை சேர்ந்தோர் சாலைகளின் ஓரத்திலும், வீடு வீடாக கிராம புறத்திலும் Sony மற்றும் Samsung போன்ற பிரத்தியேக நிறுவனங்களின் தொலைக்காட்சிகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். 

நேரில் பார்ப்பதற்கு அசல் Sony & Samsung நிறுவனங்களின் Smart Tv போல காட்சியளித்து, அதனை இயக்கினாலும் அந்நிறுவனங்கள் பெயர்கள் முதலில் வரும் வகையில் ஒளிபரப்பு செய்யப்படும். இதனை காணும் நாமும் அசலான பிரத்தியேக நிறுவனத்தின் Smart Tv என ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கொடுத்து வாங்கியிருப்போம். 

Sony Smart TV

இதனை அவர்கள் கொடுக்கும் போது ஏதேதோ கதை சொல்லி நம்மிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சி பாதி விலைக்கு என விற்பனை செய்து சென்றிருப்பார்கள். ஆனால், இவ்வாறான தொலைக்காட்சி உண்மையில் Sony & Samsung நிறுவனத்தின் Smart Tv இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. 

அதாவது, டெல்லியில் ரூ.5 ஆயிரம் செலவில் விற்பனை செய்யப்படும் மலிவு ரக Smart Tv-யை வாங்கி, Sony & Samsung நிறுவனங்களின் அசல் Smart Tv பேட்டிகள், குறிப்பேடுகளை தயார் செய்து மக்களிடம் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற செயலை செய்வோர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால், அவர்களுக்கு ஒட்டுமொத்த முதலீடு என்பது ரூ.5 ஆயிரத்திற்குள் முடிந்துவிடும். பாக்கி இலாபம். நமக்கு பட்டை நாமம்.

Sony Smart TV

இன்றளவில் வடமாநில இளைஞர்கள் பலரும் இவ்வாறான Smart TV, Speaker போன்றவற்றை விற்பனை செய்ய தொடங்கிவிட்டார்கள். ஆகையால், சுதாரிப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதில், கவனிக்கத்தக்க வகையில் கிராமப்புறங்களில் அதிகளவு விற்பனை நடந்துள்ளது. அதேபோல, விபரம் தெரிந்தவர்களே நம்பி வாங்கி இருக்கின்றனர். அவை நன்றாக இயங்கிக்கொண்டு இருப்பதால் Smart TV வங்கியோர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளதாக களத்தகவல் தெரிவிக்கின்றது.