12 ஆம் வகுப்பு மாணவியை தன்வசப்படுத்தி பாலியலை வன்கொடுமை செய்த போலி சாமியார்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

12 ஆம் வகுப்பு மாணவியை தன்வசப்படுத்தி பாலியலை வன்கொடுமை செய்த போலி சாமியார்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!


fake samiyar abused young girl

சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார். அப்பகுதி மக்கள் சிலர் இவரிடம் தங்களது குறைகளை கூறி பரிகாரம் கேட்டு வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறி கேட்பதற்காக சாமியார் பிரசாந்திடம் சென்றார். அந்த மாணவியிடம் சாமியார் பிரசாந்த் உன்னை நன்றாக படிக்க வைப்பதாகவும் நல்ல மதிப்பெண் பெறவைப்பதாகவும் மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனால் மாணவி அடிக்கடி சாமியார் பிரசாந்தை சந்தித்து வந்துள்ளார். இந்தநிலையில், சாமியார் பிரசாந்துக்கு மாணவி மீது ஆசை ஏற்பட்டது. இந்தநிலையில் சாமியார் பிரசாந்த் மனைவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி  பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும், இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சாமியார் மாணவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் சாமியார் பிரசாந்த்தின் கொடுமைகள் தாங்கமுடியாமல் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், போலி சாமியார் பிரசாந்த் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் பிரசாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.