தேர்வுகளை குறித்து சற்றுமுன் பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! உற்சாகத்தில் மாணவர்கள்.!

தேர்வுகளை குறித்து சற்றுமுன் பள்ளிக்கல்விதுறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! உற்சாகத்தில் மாணவர்கள்.!


exam-date-changed-for-election

நாடுதோறும் 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த ஏழு கட்டத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தல் நடைபெற பள்ளிகள் வாக்குசாவடிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் 18 ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் 1 முதல் 9 வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என  தேர்வு துறை முடிவு செய்திருந்தது.

அதனை தொடர்ந்து தேர்தலை முன்னிட்டு  ஏப்ரல் 12ம் தேதிக்குள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கும். மேலும் ஜூன் 1 ம் தேதி சனிக்கிழமை என்பதால் பள்ளி ஜூன் 3 ம் தேதி திறக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.