தமிழகம் Covid-19

அதிமுகவே பெரும் அதிர்ச்சி!! முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா!!

Summary:

முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளத

முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டுவந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். கொரோனா காலத்திலும் சற்றும் ஓய்வில்லாமல் தனது பணியை சிறப்பாக செய்துவந்த அமைச்சர் விஜயபாஸ்கர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்த விஜயபாஸ்கர் அவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், "பொது சுகாதார பரிசோதனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பிறகு என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.


Advertisement