அடப்பாவமே.. கொசுவர்த்தியால் முன்னாள் தலைமை ஆசிரியை பலி: தாம்பரத்தில் சோகம்.!



ex-headmaster-dead-thambaram

சென்னையில் உள்ள தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் லீலாபாய் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலிருந்து பள்ளி சார்ந்த பணிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த லீலா பாய் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

Latest news

மேலும் விசாரணை செய்கையில், கொசுவர்த்தி ஏற்றி வைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.