தமிழகம்

நோயை தீர்ப்பதாக எண்ணி, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த காரியத்தால் பறிபோன உயிர்.!

Summary:

நோயை தீர்ப்பதாக எண்ணி, உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குடும்பத்தினர் செய்த காரியத்தால் பறிபோன உயிர்.!

உடல்நலம் குன்றியிருந்த பெண்ணுக்கு பரிகாரம் செய்வதாக கூறி குடும்பத்தினர் செய்த செயலால் அவரின் உயிர் பரிதாபமாக பலியானது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம், கோப்பெருந்தேவி வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 72). இவர் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் ஆவார். இவரின் மகள் பிரதீபா (வயது 39). பிரதீபா கடந்த 20 வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தினமும் 15 மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். 

இரவு நேரத்தில் மாத்திரையை சாப்பிட்டு உறங்கும் பிரதீபா, மறுநாள் காலையில் 11 மணியளவில் தான் எழுந்துகொள்வார். இந்த நிலையில், அவர் விரைந்து குணமடைய வேண்டி குடும்பத்தினர் கோவிலுக்கு சென்ற நிலையில், அங்கு யாரோ ஒருவர் கூறிய பரிகாரத்தின்படி, கடந்த சில நாட்களாகவே ப்ரதீபாவின் தலையில் எலுமிச்சம்பழம் தேய்த்து குளிக்க வைத்து வந்துள்ளனர்.

இதனால் பிரதீபாவுக்கு நெஞ்சு சளி அதிகமாகி அவதிப்படவே, சம்பவத்தன்று பிரதீபா 15 மாதிரியுடன் 2 சளி மாத்திரைகளை சேர்த்து சாப்பிட்டுள்ளார். மறுநாள் 11 மணியளவிலும் பிரதீபா எழுந்துகொள்ளாத நிலையில், தந்தை மகள் உறங்குகிறார் என நினைத்து இருக்கிறார். அவர் உறவினரின் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற நிலையில், மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, மகள் பிரதீபா மூச்சுவிட இயலாமல் சிரமப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஈரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அவர் கடந்த 15 ஆம் தேதி மற்றொரு தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிரதீபா பரிதாபமாக உயிரிழந்தார்.


Advertisement