தமிழகம்

டுட்டோரியலுக்கு படிக்க வந்த சிறுமியை சீரழித்த கொடுமை... கர்ப்பத்தை அறிந்து அதிர்ந்த பெற்றோர்..!!

Summary:

டுட்டோரியலுக்கு படிக்க வந்த சிறுமியை சீரழித்த கொடுமை... கர்ப்பத்தை அறிந்து அதிர்ந்த பெற்றோர்..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வனத்துறை அலுவலகத்திற்கு எதிரே, தனியார் டுடோரியல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் டுடோரியல் சென்டரை நடத்தி வருபவர் லோகநாதன் (வயது 37). இவரது டுட்டோரியல் சென்டருக்கு 17 வயதுள்ள மாணவி, தனித்தேர்வுக்கு தயாராக வந்துள்ளார்‌.

இந்நிலையில், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறிய லோகநாதன், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் தற்போது மாணவி கர்ப்பிணியான நிலையில், இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 

சிறுமியின் பெற்றோர் கடந்த ஜனவரி 4 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்‌. தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதன் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. 


Advertisement