முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றி, ஹீலியம் காற்று நிரப்பி பெண் தற்கொலை : திருமணமான 100-வது நாளில் பயங்கரம்..!

முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றி, ஹீலியம் காற்று நிரப்பி பெண் தற்கொலை : திருமணமான 100-வது நாளில் பயங்கரம்..!


ERODE MARRIED SOFTWARE ENGINEER SUICIDE

திருமணம் ஆன 100-வது நாளில் பெண்மணி மர்மமான முறையில் உயிரை மாய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. தலையில் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஹீலியம் பலூன் காற்றை நிரப்பி எஞ்சினியரிங் பட்டதாரி உயிரிழந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், பொலவக்காளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் திருவேங்கடசாமி. இவர் விவசாயி ஆவார். திருவேங்கடசாமியின் மகள் இந்துமதி (வயது 25). இவர் எஞ்சினியரிங் பட்டதாரி. அங்குள்ள நல்லமகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பாரதி. இவரும் எஞ்சினியரிங் பட்டதாரி. 

தம்பதிகளுக்கு கடந்த 100 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதிகள் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். சமீபத்தில் இந்துமதியின் பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனால் பாட்டியை காண இந்துமதி கணவருடன் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், உறங்க வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். தூங்கிவிட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. கதவை தட்டியபோது, அது உள்தாழ்ப்பால் இடப்பட்டு இருந்தது அம்பலமானது.

erode

இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் இந்துமதி தற்கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிய இந்துமதி, பலூனுக்கு அடைக்கும் ஹீலியம் கேஸை பிளாஸ்டிக் பைக்குள் நிரப்பி மூச்சுத்திணறி மரணித்துள்ளார். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கோபிசெட்டிபாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.