வேலையிடத்தில் காதல், திருமணம், லிவிங் டுகெதர் வாழ்க்கை.. ஐ.டி பெண் ஊழியர் காதல் கணவனின் வீட்டில் தர்ணா.. கண்ணீர் குமுறல்.!

வேலையிடத்தில் காதல், திருமணம், லிவிங் டுகெதர் வாழ்க்கை.. ஐ.டி பெண் ஊழியர் காதல் கணவனின் வீட்டில் தர்ணா.. கண்ணீர் குமுறல்.!


Erode Love Married Girl Dharna Protest at in front of Husband House

விநாயகர் கோவிலில் தாலிகட்டி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியில், துணைவன் துணைவியை கைவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், காதல் கணவனுடன் சேர விரும்பிய பெண் தர்ணா போராட்டத்தில் குதித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, செங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் சின்னப்பன். இவரின் மகள் ரஞ்சினி (வயது 27), எஞ்சினியரிங் பட்டதாரி ஆவார். இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்தை அண்ணா நகரை சேர்ந்த வெங்கிடு என்பவரின் மகன் மோகன்ராஜ் நடத்தி வந்துள்ளார். 

இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மலரவே, இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, சில மாதங்களுக்கு முன்னதாக பெங்களூரில் இருக்கும் விநாயகர் கோவிலில் திருமணம் செய்துகொண்டவர்கள், வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். 

erode

இந்நிலையில், மோகன்ராஜ் பெங்களூரில் இருந்து பவானிக்கு வந்திருந்த நிலையில், அதன்பின்னர் பெங்களூர் செல்லவில்லை. ரஞ்சினியின் அழைப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சினி பெங்களூரில் இருந்து புறப்பட்டு பவனியில் இருக்கும் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது, தான் ஏமாற்றப்பட்டது உறுதியாகவே, கண்ணீர் விட்டு கதறிய ரஞ்சினி காதல் கணவரை சேர்த்து வைக்கக்கூறி மோகன்ராஜின் வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. காவல் துறையினர் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பெண் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.