தமிழகம்

எந்த நேரமும் காதலனுடன் கடலை... பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி பரபரப்பு காரியம்‌.. பறி போன உயிர்..!

Summary:

எந்த நேரமும் காதலனுடன் கடலை... பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி பரபரப்பு காரியம்‌.. பறி போன உயிர்..!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் பகுதியைச் சார்ந்தவர் ராஜா. இவரின் மனைவி மோகன ராணி. இந்த தம்பதிகளுக்கு பிரியா மற்றும் தனலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் பிரியா காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவருடன் எழுமாத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். தனது அக்காவைப் சந்திப்பதற்கு தனலட்சுமி அவ்வபோது அக்காவின் வீட்டிற்குச் சென்று வருவது வழக்கம். 

இந்த நிலையில், அக்கா வீட்டிற்கு சென்று வரும்போது கணவரின் உறவினரான ஒரு இளைஞருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்ட, பின்னாளில் இது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் காதலித்து வந்த நிலையில், இந்த விஷயம் தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர், நீ தற்போது கல்லூரியில் பயின்று வருவதால் படிப்பு முடித்ததும் திருமணம் காதல் போன்ற விஷயங்களை பார்த்துக்கொள்ளலாம். தற்போது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்று அறிவுரை கூறியுள்ளனர். 

இதனை கண்டுகொள்ளாத தனலட்சுமி காதலருடன் தொடர்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர் சம்பவத்தன்று தனலட்சுமியை கண்டித்துள்ளனர். 

இதன் பின்னர் சிறிது நேரத்தில் தனலட்சுமி வாந்தி எடுக்கவே, பதறிப்போன பெற்றோர் விசாரித்தபோது மன உளைச்சலில் இருந்ததால் விஷம் சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மகளை மீட்ட பெற்றோர் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement