காதில் நுழைந்த பூச்சி செய்த வேலை : வலியால் துடிதுடித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி..!

காதில் நுழைந்த பூச்சி செய்த வேலை : வலியால் துடிதுடித்து தற்கொலை செய்த கல்லூரி மாணவி..!


erode-college-girl-suicide

பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துள்ள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது. 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியில் செயல்படும் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவி வர்ஷா. 

இவர் நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு வந்த போது திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலையை கண்ட அதிர்ச்சியடைந்த பிற மாணவிகள், விடுதி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

erode

பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், வர்ஷாவின் காதுக்குள் பூச்சி புகுந்து விட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்றாலும் காது வலி சரியாகாமல் இருந்த நிலையில், தேர்வு சரிவர அவரால் எழுத முடியவில்லை என்ற வருத்தத்தில் தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது.