கணவரிடம் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. பின்னாலே சென்று கணவர் செய்த பதற வைக்கும் காரியம்.!

கணவரிடம் சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி.. பின்னாலே சென்று கணவர் செய்த பதற வைக்கும் காரியம்.!


engineer-burned-car-near-nagarkovil

நாகர்கோவில் பெருவிளை அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் -கேஷில்டா மேரி தம்பதியினர். யூஜின் மரிய ஸ்டாலின் என்பவர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

தொடர் சண்டையால் பொருமையிழந்த கேஷில்டா மேரி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து யூஜின் மரிய ஸ்டாலின் பின்னாடியே சென்று அடிக்கடி கேஷில்டா மேரியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

Boruned

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்று தகராறு செய்த யூஜின் மரிய ஸ்டாலின் ஆத்திரத்தில் கேஷில்டா மேரி வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு காரையும் பெட்ரோல் ஊற்றி கொழுத்தியுள்ளார்.

அதில் ஒரு கார் முற்றிலும் எரிந்து போனது. மற்றொரு காரின் பின்பகுதி முழுமையாக எரிந்து விட்டது. கேஷில்டா மேரி இதுகுறித்து போலீசில் புகாரளிக்க போலீசார் யூஜின் மரிய ஸ்டாலினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.