தமிழகம் லைப் ஸ்டைல்

அந்த மனசுதான் சார் கடவுள்.. சாலையில் கிடந்த நாயை மிதிக்காமல் நகர்ந்து செல்லும் யானை..! வைரல் வீடியோ..

Summary:

பாகன் ஒருவர் சாலையில் அழைத்துச்சென்ற யானை ஒன்றின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகன் ஒருவர் சாலையில் அழைத்துச்சென்ற யானை ஒன்றின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விலங்குகள் என்றால் மூர்கத்தனத்துடன் நடந்துகொள்ளும் என்பார்கள். ஆனால் அந்த வார்த்தையை பொய்யாக்கியுள்ளது இந்த யானை. ஆம், பாகன் ஒருவர் யானை ஒன்றை போக்குவரத்துக்கு மிகுந்த சாலை ஒன்றில் அழைத்துசென்றுள்ளார். அப்போது யானை சென்றுகொண்டிருந்த பாதையில், நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்துள்ளது.

நேராக தனது பாதையில் சென்றுகொண்டிருந்த அந்த யானை, திடீரென தனது பாதையின் குறுக்கே நாய் ஒன்று கிடப்பதை பார்த்ததும், அதனை மிதிக்காமல் சிறிது தூரம் நகர்ந்து சென்று அந்த நாயை கடந்து செல்கிறது.

அதேநேரம் அந்த யானைக்கு பின்னால் வந்த கார் ஒன்று இறந்து கிடந்த நாய்க்கு நடுவே வேகமாக செல்கிறது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்ட தற்போது அந்த காட்சி இணையவாசிகள் மத்தியில் வைரலாகிவருகிறது.

மேலும், அந்த யானையின் மதி நுட்பத்தையும், அதன் நாகரீகத்தையும் பார்த்த நெட்டிசன்கள் அந்த யானையை புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement