தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்ட மற்றும் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தேதி மற்றும் ஒன்றியங்கள்!

Summary:

election in pudukkottai


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல்  டிசம்பர் 27 மற்றும் 30 ந்தேதிகளில் 2 கட்டமாக  நடைபெறும் என்றும். அதற்கான அறிவிப்பாணை  டிசம்பர்  6 ஆம் தேதி   வெளியிடப்படும் என்றும். உள்ளாட்சி தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு (27.12.2019) நடைபெறும் ஒன்றியங்கள்:

*அன்னவாசல்
*குன்றாண்டார்கோவில்
*விராலிமலை
*கறம்பக்குடி
*கந்தர்வகோட்டை
*புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் (30.12.2019) நடைபெறும் ஒன்றியங்கள்:

*அரிமளம்
*அறந்தாங்கி
*ஆவுடையார் கோவில்
*பொன்னமராவதி
*திருமயம்
*மணமேல்குடி
*திருவரங்குளம்


Advertisement