பாஸ் மீண்டும் ஃபெயில்... 8 ஆம் வகுப்பு மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு.!eight-grade-student-commit-suicide-because-her-teacher

கன்னியாகுமரி மாவட்டத்தில்  எட்டாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பிற்கு மாற்றியதால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆன லட்சுமண பெருமாள். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த இரண்டு குழந்தைகளுமே கொட்டாரம்  அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவரது இளைய மகளான சிவப்பிரியா அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தார்.

tamilnadu

இந்நிலையில் தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்படி வகுப்பு ஆசிரியர் சிவப்பிரியாவை எட்டாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்கு மாற்றி இருக்கிறார். இது பற்றி சிவப்பிரியாவின் பெற்றோரிடமும் தெரிவிக்கப்படவில்லை மேலும் சிவப்பிரியாவுடன் படித்த மாணவிகள் அவரை கிண்டல் செய்து இருக்கின்றனர் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்று காலை பள்ளி செல்வதற்காக தாய் அவரை எழுப்பிய போது மயங்கிய நிலையிலிருந்த சிவப்பிரியாவை  குடும்பத்தினர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சிவப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர்.