தமிழகம் இந்தியா

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதல்வர்..

Summary:

இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது.விவசாயிகளின்

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர்  ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.

9,924 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

1. கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

2. விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூபாய் 5,000 மானியம் வழங்கப்படும்.

3. விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் மற்றும் சுயஉதவிக்குழுவினுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

4. கடலில் மீன்பிடிக்கும் போது மீனவர்கள் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

5. விவசாயத்தில் ஈடுபடும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 50% மானியம் வழங்கப்படும்

6. புதுச்சேரியில் மூட்டப்பட்டுள்ள நியாவிலைக் கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும். இலவச அரிசி வழங்க ரூ.197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7. தேசிய மயக்கப்பட்ட வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன் வழங்கப்படும். கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்.

8. பழங்குடியின மாணவர்களுக்கு தங்கும் விடுதி புதியதாக அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச படிப்பு திறம்பட செயல்படுத்தப்படும்.

9. 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற அரசு பாடுபடும். மாணவர் இடை நிற்றலை தவிர்க்க கல்வி கற்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும்.

10. விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும்.

11. 88 கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்படும். அனைத்து கோயில்களின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement