அதிமுக-வுக்கு துரோகம் இழைத்த தங்க தமிழ்செல்வனுக்கு இதுதான் தண்டனை.! எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.!

அதிமுக-வுக்கு துரோகம் இழைத்த தங்க தமிழ்செல்வனுக்கு இதுதான் தண்டனை.! எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்.!



edapadi-palanisami-talk-about-thanga-thamilselvan

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. 

இந்தநிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். அவரை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தி.மு.க சார்பில் போட்டியிடுகிறார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். அதேபோல், நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளன. இதனால் போடி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக மாறியுள்ளது.

Admk

இந்நிலையில், தேனி மாவட்டம் போடியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பால் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. ஆனார். இல்லையென்றால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனால் அதையெல்லாம் மறந்து தற்போது அதிமுக-வுக்கு துரோகம் இழைத்த தங்க தமிழ்செல்வன் டெபாசிட் இழப்பார். அதுதான் அவருக்கு கொடுக்கக்கூடிய சரியான தண்டனை என தெரிவித்தார்.