அரசியல் தமிழகம்

அ.தி.மு.க.ஆட்சிக்கு தினமும் விளம்பரம் செய்யும் மு.க.ஸ்டாலின்! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Summary:

Edapadi palanisami talk about stalin

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் இல்லத் திருமண விழா இன்று  தஞ்சையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

2001 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் ஒரத்தநாடு தொகுதியின் வைத்திலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வைத்திலிங்கம் அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர், துணைமுதல்வர், தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், த.மா.கா., தலைவர் வாசன், பா.ஜ., மாநில மாநில செயலாளர் கருப்பு.முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசுகையில், நாள்தோறும் எங்களைப் பற்றி நாங்கள் விளம்பரம் செய்து கொள்ள தேவையே இல்லை, ஸ்டாலினே விளம்பரம் செய்து கொடுக்கிறார். ஸ்டாலினுக்கு விவசாயி என்றாலே என்ன எரிச்சல் என தெரியவில்லை, நான் விவசாயி என்று சொன்னால், நீ விவசாயி இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். 

நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர், அதனால் நான் விவசாயி என்று தானே கூற வேண்டும். ஆனால் ஸ்டாலினுக்கு அது பிடிக்கவில்லை. 
விவசாயி என்றால் பெருமையான விஷயம், அடுத்தவரிடம் கையேந்தாதவர்கள் அல்ல விவசாயிகள், விவசாயிகள் எப்போதும் சொந்தக்காலில் நிற்பார்கள்,  சொந்த காலில் நிற்கும் விவசாயிகளை எதிர்த்துப் போராடி ஸ்டாலினால் வெல்ல முடியாது என முதல்வர் பேசினார்.


Advertisement