தமிழகம்

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பளார்., பளாரென குடிகாரனை வெளுத்தெடுத்த சிங்கப்பெண்..!

Summary:

குடிபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை... பளார்., பளாரென குடிகாரனை வெளுத்தெடுத்த சிங்கப்பெண்..!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது, மதுபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவரை காவல்துறையினரின் கண்முன்னே அந்த பெண் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தியாகராயநகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 38). இவர் நெல்லை பேருந்துநிலையத்தில் நாகர்கோவில் வழியே செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அதே பேருந்தில் இருந்த ஒரு பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் கோபமுற்ற அந்த பெண் பயணி, மணிகண்டனை அவதூறாக தீட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதனைக்கண்ட சக பயணிகளும், அந்தப் பெண்மணியுடன் சேர்ந்து மணிகண்டனை அடித்து பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மேலப்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

ஆனால், ஆவேசத்தில் கோபத்தை பொறுக்க இயலாத பெண் பயணி, காவல்துறையினரின் கண்முன் 'பளார் பளார்' என அறைந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதையடுத்து மணிகண்டனை மீட்ட காவல்துறையினர், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அத்துடன் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மணிகண்டன் மிகவும் குடித்து மதுபோதையில் தள்ளாடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பொது இடத்தில் தன்னிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றதை, தனியாளாக எதிர் கொண்ட பெண் பயணியின் செயலை அங்கிருந்த மக்களும், காவல்துறையினரும் பாராட்டியுள்ளனர்.


Advertisement