குடி போதையில் ரயில்வே பாலத்தின் மேல் ஆட்டம் போட்ட நபர்... 60 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் பரபரப்பு...!

குடி போதையில் ரயில்வே பாலத்தின் மேல் ஆட்டம் போட்ட நபர்... 60 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் பரபரப்பு...!


Drunk man who played on top of railway bridge...Falled from a height of 60 feet causing excitement..

60 அடி உயரத்தில் இருந்து குடி போதையில் ரெயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்தவரை 1 கி.மீ. தூரம் தூக்கி சென்று தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகில் உள்ள கழுவன்திட்டை பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

உடனடியாக தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடலில் சிறு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். உடனே தீயணைப்பு துறையினர் அவரை மேலே கொண்டு வர, உயரம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்ட்ரெட்ச்சரில் சுமந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (45), என்பது தெரிய வந்தது. ரெயில்வே பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மீது குடித்துவிட்டு போதையில் இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பது தெரியவந்ததுள்ளது.