234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்!. திட்டவட்டமாய் தெரிவித்த டி.ஆர்.பாலு

234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்!. திட்டவட்டமாய் தெரிவித்த டி.ஆர்.பாலு



DR Balu talk about udhayanithi

தமிழகத்தின் எந்த தொகுதியிலும் போட்டியிட்டாலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக பொருளாளராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இன்று திருவாரூர் வந்த டி.ஆர்.பாலு அங்கு, காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்த்தித்த திமுக பொருளாளர் டி ஆர் பாலு,  ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து அதிமுக நீட் தேர்வுக்கு எதிராக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு இப்போது தான் ஞானோதயம் வந்திருக்கிறது என்றும் தேர்தல் வருவதால் மக்கள் மீது கரிசனம் இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

udhayanithi

மத்திய அரசின் திட்டங்களை அதிமுக ஆதரிப்பதற்கு பொது மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். உதயநிதி முக்கிய பொறுப்பில் இருப்பதால் சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் அல்ல அவர் தமிழகத்தின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்..