இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்காதிங்க..! அமைச்சர் வேண்டுகோள்.!

இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்காதிங்க..! அமைச்சர் வேண்டுகோள்.!



don't open Sembarambakkam Lake in night

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தமிழகத்தை கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.  
 
இதனால் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் சில இடங்களில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வருவாய், பேரிடம் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் கனமழை காரணமாக  உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள ஏரிகளை பகல் நேரத்தில் மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.