71 கல்லூரிகளில் B.Ed, M.Ed படிப்புகளில் சேர வேண்டாம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவு!

71 கல்லூரிகளில் B.Ed, M.Ed படிப்புகளில் சேர வேண்டாம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவு!


dont-addition-to-some-bed-college

கல்வியியல் கல்லூரிகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதித்துள்ளனர். உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 58 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Bed college

இந்த 71 கல்வியியல் கல்லூரிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட்டு அவற்றில் B.Ed., M.Ed., உள்ளிட்ட படிப்புகளில் புதிதாக மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது. மாணவர்கள் யாரும் மீறி சேர்ந்தால் அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.