விதிகளை மதிக்காத மனிதர்கள் மத்தியில் ஐந்தறிவு கொண்ட நாய் செய்த வினோத செயல்! வைரல் வீடியோ!

விதிகளை மதிக்காத மனிதர்கள் மத்தியில் ஐந்தறிவு கொண்ட நாய் செய்த வினோத செயல்! வைரல் வீடியோ!


dog wearing helmet


சென்னை கோயம்பேடு சாலையில் உள்ள சின்மயா நகர் பகுதியில் ‘ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் இந்த நாயின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும் என்பது சமீபத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

பொதுமக்களுக்கு பல விதங்களில் விழிப்புணர்வு செய்தலும், சிலர், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

உயிர்காக்கும் சட்டத்தை மதிக்காத ஆறறிவு கொண்ட மனிதர்கள் மத்தியில், ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று ‘ஹெல்மெட்’ அணிந்தபடி தனது உரிமையாளருடன் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.