தமிழகம்

ரயிலில் பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தை கடப்பவர்கள் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் அறிவுள்ள நாய்!

Summary:

dog saved passengers in train

பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் தெருநாய்கள் நடமாட்டம் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருக்கும் சின்னப்பொண்ணு என்ற நாய் சற்று வித்தியாசமாக ரயில்வே நடைமேடையை சுற்றி வருகிறது. கருப்பும் இள பிரவுன் நிறமும் கொண்ட இந்த நாய் பலரும் கவனிக்கத் தக்க வகையில் பணிகளை செய்து வருகிறது.

பிளாட்பாரத்தில் படுத்து கிடக்கும் இந்த சின்னப்பொண்ணு நாய், ரயில் வரும் போது எழுந்து நின்று பார்க்கும். அப்போது ரயில் படிக்கட்டில் யாராவது தொங்கிக் கொண்டுவந்தால் அவைகளை பார்த்து குரைத்துக் கொண்டே பின்னால் ஓடும். இதனால் பூங்கா ரயில்நிலையம் வந்ததும், தினமும் வருபவர்கள் உசாராக ரயிலுக்குள் சென்று விடுவார்கள். 

காவலர்கள் ரோந்து சென்றால் அவர்களுடன் ரோந்துச் செல்வது, காவலர்களுடனே சுற்றுவது என வாடிக்கையாக வைத்துள்ளது இந்த சின்னப்பொண்ணு நாய். இந்த நாய் பயணிகளுக்கு எப்போதும் எந்தவிதமான இடையூறு, தொந்தரவும் எதுவும் செய்வதில்லை என கூறுகின்றனர்.

இந்த சின்னப்பொண்ணு நாய் படியில் தொங்குபவர்களை மட்டுமல்லாமல், தண்டவாளத்தை கடப்பவர்களையும் பார்த்து குரைக்கிறது. அதைக்கண்டு படியில் தொங்குபவர்கள், தண்டவாளத்தை கடப்பவர்கள் உஷாராக அந்த தவறுகளை செய்வதில்லை. இந்த சின்னப்பொண்ணு நாய்க்கு தினம் தினம் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Advertisement