தமிழகம்

திடீரென தோட்டத்திற்குள் புகுர்ந்த கரடி.!! அலரல் சத்தம் போட்ட விவசாயி..!! வளர்ப்பு நாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!!

Summary:

திடீரென தோட்டத்திற்குள் புகுர்ந்த கரடி.!! அலரல் சத்தம் போட்ட விவசாயி..!! வளர்ப்பு நாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!!

கரடியிடமிருந்து, தனது வீட்டில் வளர்த்து வந்த பப்பி என்ற நாய் விவசாயியை காப்பாற்றியதால் அப்பகுதி மக்களிடையே, இதைப் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி குஞ்சப்பனை ஊரைச்  சேர்ந்தவர் ராமராஜ். விவசாயம் வேலைப் பார்த்து வரும் ராமராஜ் நேற்று முன்தினம் தனது தோட்டத்தில் வேலை செய்துள்ளார். அப்போது தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து கரடி ஒன்று தனது குட்டியுடன் தோட்டத்துக்குள் வந்து, ராமராஜை தாக்கியது.

அப்போது ராமராஜ் அலரல் சத்தம் போட்டுள்ளார். பின்னர், இவரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்லப்பிராணியான பப்பி என்ற பெயருடைய நாய் ஒன்று, ராமராஜ் அலரல் சத்தம் கேட்டதும், உடனே தோட்டத்திற்க்கு விரைந்து வந்து கரடியை பார்த்து குறைத்தது. பிறகு பப்பியின் சத்தத்தை கேட்ட கரடி, தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

இதனையடுத்து, கையில் பலத்த காயங்களுடன் இருந்த ராமராஜை, அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement