தமிழகம் மருத்துவம்

தமிழகத்தில் ஊரடங்கை 14 நாள் நீட்டிக்க வேண்டும்! மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை!

Summary:

Doctors team requst to extend 144

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளிலும் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் 6400பேர்  கொரோனோவால்  பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.  199 பேர்  உயிரிழந்துள்ளனர். 504 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், கொரோனா தொற்றுக்கான சிகிச்சை வழிமுறைகளை வகுக்கவும், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகளை கண்காணித்து, தமிழகத்தில் அவற்றை பயன் படுத்துவது குறித்த வழிகாட்டியை தயார் செய்யவும் 19 மருத்துவர்களை கொண்ட நிபுணர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. கடந்த ஒரு வாரத்தை கவனித்தால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருப்பது தெரியும். எனவே இந்த ஊரடங்கை மேலும், 14 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என்று அனைத்து மருத்துவ நிபுணர்களும் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.


Advertisement