மருத்துவர் சைமனின் உடலை முறைப்படி மீண்டும் புதைக்க தமிழக அரசிடம் முறையிடப்படும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதி!



doctor-simons-body-will-be-re-funeral-hope-by-vijakanth

சென்னையில் கொரோனவால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்துவ முறைப்படி பெட்டியில் வைத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட தமிழக அரசிடம் முறையிடப்படும் என தேமுதிக தலைவர் வியாஜயகாந்த் மருத்துவரின் மனைவிக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை சென்னை கீழ்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது உடல் வேளாண்காடு மயானத்தில் பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது.

doctor simon

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகவும் மன வேதனையடைந்த தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தனக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியில் கோரோனோவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்து கொள்ளலாம் என அறிக்கை வெளியிட்டார். விஜயகாந்தின் இந்த நல்ல எண்ணத்தை பாராட்டி பலரும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது மருத்துவர் சைமனின் மனைவியிடம் தொலைபேசியில் பேசிய விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி திருமதி பிரேமலதா மருத்துவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மருத்துவரின் மனைவி கேட்டுக்கொண்டபடி உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கிறிஸ்துவ முறைப்படி பெட்டியில் வைத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட தமிழக அரசிடம் முறையிடப்படும் என மருத்துவரின் மனைவிக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.