தமிழகம்

நடுரோட்டில் வலிப்பு வந்து துடி துடித்த இளைஞர்..! காரை நிறுத்தி உயிரை காப்பற்றிய டாக்டர்..! குவியும் பாராட்டுகள்..!

Summary:

Doctor saved patient at road in Pudukottai

நடு ரோட்டில் வலிப்பு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை அந்த வழியாக எதேச்சையாக வந்த மருத்துவர் ஒருவர் மீட்டு அவருக்கு முதலுதவி கொடுத்து அவரை காப்பாற்றியுள்ள சம்பம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குகுடிக்கு தவளைபள்ளம் கிராமம் வழியாக செல்லும் சாலையில் இளைஞர் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொண்டு இருந்துள்ளார். அந்த வழியாக காரில் வந்த மருத்துவர் பெரியசாமி காரை நிறுத்திவிட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றினார்.

பின்னர் அம்புலன்ஸ் வாகனம் வரவைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இளைஞரை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய மருத்துவர் பெரியசாமி, கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் தினமும் இந்த வழியாகத்தான் காரில் செல்வேன்.

இன்று எதார்த்தமாக இந்த சாலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக நோயாளிகளை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்குவேன், இன்று சாலையில் வைத்து சிகிச்சை கொடுத்துளேன். அவ்வளவுதான். பெரிதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை.

என்ன ஒரு வருத்தம் என்றால், அந்த நபர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த வழியாக சென்ற சிலர் அவரை கண்டுகொள்ளவில்லை, இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் மருத்துவர்தான் உதவ வேண்டும் என்று இல்லை. பொதுமக்களும் உதவி செய்யலாம் என கூறியுள்ளார்.


Advertisement