தமிழகம்

தனக்கு தானே விஷஊசி போட்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்! வெளியான பதறவைக்கும் அதிர்ச்சி காரணம்!

Summary:

doctor commit suicide by insect poision

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சூரக்குழி பகுதியில் வசித்துவரும் செல்வராஜின் மகன் சரவணன். 33 வயது நிறைந்த இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக மயக்கவியல் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் சரவணனின் பெற்றோர்கள் அவரது திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். ஆனால் அவரோ திருமணம் செய்து கொள்ளவதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்தபோது, 4-வது தளத்தில் உள்ள அறைக்கு சென்று திடீரென தனது கையில் மயக்க ஊசியை போட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் உடலில் அதிகமாக மயக்கமருந்தை செலுத்தியதால் அவர்  அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள், அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, சரவணனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், பெற்றோர்கள் அவரை கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு திருமணத்திற்கு பார்த்த பெண்ணை பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதற்காகத்தான் சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காதல் விவகாரம்  ஏதேனும் உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 


Advertisement